Home Featured இந்தியா பிரதமர் மோடி உயிருக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை கடும் எச்சரிக்கை!

பிரதமர் மோடி உயிருக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை கடும் எச்சரிக்கை!

623
0
SHARE
Ad

Narendra Modiபுதுடெல்லி – தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுத்து வருவதால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பல்வேறு தீவிரவாத அமைப்புகள் அவருக்குக் குறி வைத்துள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதனால் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, அவர் செங்கோட்டையில், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத கண்ணாடிப் பெட்டிக்குள் நின்று உரையாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த முறை உளவுத்துறையின் எச்சரிக்கையை பிரதமர் மோடி மீற இயலாது என்றும், காரணம், இந்த முறை அச்சுறுத்தல் சற்று கடுமையாகவே உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice