சென்னை. மார்ச்.19- 1967-ம் ஆண்டு ஜெய்சங்கர்-நாகேஷ் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘பட்டணத்தில் பூதம்’. இப்படம் மாயாஜாலம் கலந்து நகைச்சுவையாக எடுத்திருந்தனர்.
இப்போது இப்படத்தை மீண்டும் மறுபதிப்பு செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம். இதில் பூதம் கதாபாத்திரத்தில் நடிக்க பவர் ஸ்டார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அதோடு, ஜெய்சங்கர் வேடத்தில் நடிக்க ‘தமிழ் படம்’ சிவாவிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தயாரிக்கப் போகிறாராம். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இந்த படத்தையும் இயக்கவிருக்கிறார். கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.
மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான தலைப்பு இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.