இதில் சிக்கல் என்னவென்றால், நடப்பு ஆட்சிக் குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான கசாலி தைப் அகமட் சைட்டின் தீவிர ஆதரவாளர் என்பதால், அகமட் சைட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் கசாலியும் கட்சியிலிருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது 15 ஆக இருக்கும் அம்னோவின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 13ஆக குறைந்து விடும். திரெங்கானு மாநில அரசாங்கமும் கவிழும் அபாயம் ஏற்படும்.
திரெங்கானு சட்டமன்ற நிலைமை
மொத்தம் 32 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திரெங்கானு சட்டமன்றத்தில் தற்போது அம்னோ 17 உறுப்பினர்களையும், பாஸ் 14 உறுப்பினர்களையும், பிகேஆர் ஓர் உறுப்பினரையும் கொண்டுள்ளது.
இவர்களில் அகமட் சைட் மற்றும் கசாலி தைப் ஆகிய இருவரும் அம்னோவிலிருந்து விலகினால், அம்னோவின் சட்டமன்ற பலம் 15 ஆக குறைந்து, தேசிய முன்னணி சிறுபான்மை அரசாங்கமாகிவிடும்.
ஆனால், தற்போது நஜிப்புடன் நெருக்கம் பாராட்டி வரும் பாஸ் கட்சி தலைவர் ஹாஜி ஹாடி அவாங் திரெங்கானு அரசாங்கத்தைக் கவிழ்த்துப் புதிய அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்வியும் எழுகின்றது.
1 எம்டிபி விவகாரம் உட்பட எந்தவித அரசியல் விவகாரத்திலும் நஜிப்பிற்கு எதிராக கருத்து சொல்லாமல் தவிர்த்து விடும் ஹாடி அவாங் ஒப்புதல் இல்லாமல் திரெங்கானுவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
-இரா.முத்தரசன்