மெர்சிங் – ஒவ்வொரு ஆண்டும் தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் (Hari Hol celebrations) கலந்து கொள்ளாதவர்களின் டத்தோ பட்டம் பறிக்கப்படும் என ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அன்றைய நாள் மாநிலத்தின் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டும் கூட சிலர், அதில் கலந்து கொள்வதில்லை என்பதால், ஜோகூர் சுல்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால், என்னுடைய தந்தையை நினைவு கூற, அவர்கள் தங்களது நேரத்தைச் செலவிட விரும்பவில்லை என்று காட்டுகிறது” என்று இன்று வியாழக்கிழமை சிறப்புப் படைப் பிரிவின்(Gerak Khas regimen) 51 வது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுல்தான் தெரிவித்துள்ளார்.
மேலும், அதனால், அவர்களின் டத்தோ பட்டம் பறிக்கப்படுவது சிறந்தது அல்லது அதை ஏற்றுக் கொண்டு அவர்களாகவே தங்களது பட்டத்தைத் திரும்பத் தருவது நல்லது என்று சுல்தான் தெரிவித்துள்ளார்.