Home Featured இந்தியா சோனியா காந்திக்கு தோளில் அறுவைச் சிகிச்சை!

சோனியா காந்திக்கு தோளில் அறுவைச் சிகிச்சை!

690
0
SHARE
Ad

sonia_7

மும்பை – வாரணாசி பிரச்சாரக் கூட்டத்தில் தோள்பட்டை எலும்பி பிசகியதால் உடல்நலக் குறைவை எதிர்நோக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு புதன்கிழமை மாலை அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சஞ்சய் தேசாய் தலைமையிலான மருத்துவர் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

டாக்டர் சஞ்சய் அண்மையில் ஷாருக்கானின் முழங்காலிலும் அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தைத் தொடக்கும் விதமாக வாரணாசி சென்ற சோனியா அங்கு நடந்த சம்பவத்தால் அவரது தோள்பட்டை எலும்பி பிசகியது. அதன் காரணமாக பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புதுடில்லி திரும்பினார்.

புதுடில்லியின்  சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்திக்கான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.