Home Featured உலகம் சிங்கப்பூர் மீதான ராக்கெட் தாக்குதல் சதித் திட்டம் முறியடிப்பு!

சிங்கப்பூர் மீதான ராக்கெட் தாக்குதல் சதித் திட்டம் முறியடிப்பு!

664
0
SHARE
Ad

singapore-batam-attackஜகார்த்தா – சிங்கப்பூரில் பிரபல சுற்றுலாத் தளமான மெரினா பேவை, ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் போட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தோனிசியாவில் பாத்தாம் தீவில் உள்ள கத்திபா கிகி ரஹ்மாட் என்ற இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் நேற்று வெள்ளிக்கிழமை இந்தோனிசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சதித் திட்டம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பாத்தாம் பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கத்திபா கிகி ராஹ்மட் என்ற இயக்கம் இந்தோனிசியர்களை சிரியாவின் ஐஎஸ் அமைப்பில் இணைக்க உதவி செய்து வரும் அமைப்பாகும்.

நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள அந்த 6 பேரும் 19 முதல் 46 வயதுடையவர்கள் என்று காவல்துறைத் தெரிவித்துள்ளது.