Home Featured உலகம் 19 வயதுப் பெண்ணால் அமெரிக்காவுக்கு முதல் ஒலிம்பிக்ஸ் தங்கம்!

19 வயதுப் பெண்ணால் அமெரிக்காவுக்கு முதல் ஒலிம்பிக்ஸ் தங்கம்!

817
0
SHARE
Ad

Olympic-first gold-usa-Shooting-

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்சில் முதல் தங்கத்தை வெற்றி கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கின்றது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் தூரத்துக்கான துப்பாகி சுடும் போட்டியில் (10M AIR RIFLE) அமெரிக்காவின் 19 வயது வெர்ஜினியா திரெஷர் என்ற இளம் பெண் (படம் நடுவில்) தங்கம் பெற்றார்.

தனக்கு கடும் போட்டியை வழங்கிய சீனாவின் இரண்டு சக போட்டியாளர்களைத் தோற்கடித்து அவர் தங்கம் பெற்றார். சீனாவின் டு லி வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்சில் தங்கம் பெற்றவராவார்.

#TamilSchoolmychoice

மூன்றாவதாக, வெண்கலப் பதக்கத்தை சீனாவின் யீ சிலிங் பெற்றார்.