Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முன்னணி!

ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முன்னணி!

881
0
SHARE
Ad

olympics_350_021114011607

ரியோ டி ஜெனிரோ – விளையாட்டுத் துறையில் உலகின் முன்னணி நாடான அமெரிக்கா, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களிலும் எப்போதும் முன்னணி வகிக்கும். ஆனால், இந்த முறை போட்டிகள் தொடங்கியவுடன், எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலியா, ஹங்கேரி நாடுகள் முன்னணி வகிக்கத் தொடங்கின.

ஆனால், போட்டிகள் தொடங்கிய இரண்டு நாட்களில் அமெரிக்கா 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் பதக்கங்களுடன், பட்டியலில் தனது முதல் நிலைத் தகுதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

olympics-medal tally

ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஆகக் கடைசியான பதக்கப் பட்டியல் நிலவரம்…

இருப்பினும் சீனா, ஆஸ்திரேலியா நாடுகள் தொடர்ந்து அமெரிக்காவுக்கு அடுத்த  நிலையில் இருந்து வருகின்றன. 3 தங்கம் உள்ளிட்ட 8 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது நிலையிலும், 3 தங்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது நிலையிலும் பதக்கப் பட்டியல் வரிசையில் உள்ளன.