Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் : அமெரிக்காவை முந்திய சீனா, ஆஸ்திரேலியா!

ஒலிம்பிக்ஸ் : அமெரிக்காவை முந்திய சீனா, ஆஸ்திரேலியா!

870
0
SHARE
Ad

Olympics-flame-opening ceremony

ரியோ டி ஜெனிரோ – ஆகக் கடைசியான நிலவரங்களின்படி, ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில், முன்னணியில் இருந்த அமெரிக்காவை சீனா, ஆஸ்திரேலியா நாடுகள் முந்திக் கொண்டுள்ளன.

சீனா, 4 தங்கம் உள்ளிட்ட 10 பதக்கங்களுடன் முதல் நிலையைப் பிடித்துள்ளது. 4 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.

#TamilSchoolmychoice

olympics-medal tally-9 aug morning

ஒலிம்பிக்சில் முதல் 10 நாடுகளின் பதக்கப் பட்டியல்

பொதுவாக அமெரிக்காவின் விளையாட்டுத் துறை பலம், திடல் மற்றும் ஓட்டப் பந்தயப் போட்டிகளில்தான் அடங்கியுள்ளது. இன்னும் திடல் தளப் போட்டிகள் முழுமையாகத் தொடங்கவில்லை என்பதால், மற்ற நாடுகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகின்றது.

ஆனால், திடல் போட்டிகள் தொடங்கியவுடன் அமெரிக்காவின் பதக்க ஆக்கிரமிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.