புதுடில்லி – முன்மொழியப்பட்ட காலத்திலிருந்து கடந்த 11 ஆண்டுகாலமாக பல்வேறு சர்ச்சைகளையும், போராட்டங்களையும் சந்தித்து வந்த ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி, நேற்று இந்திய நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழகத்தை ஆளும் அதிமுக உறுப்பினர்கள் மட்டும் வெளிநடப்பு செய்ய, நாடாளுமன்ற அவையில் இருந்த 433 உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரிக்க ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த புதிய சட்டம், இந்தியாவில் மாபெரும் பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவரும் என்றும், “வரி பயங்கரவாதங்களை” ஒழிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்துள்ளார்.