ஈப்போ – பேராக் மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவர் பதவி மீண்டும் மஇகாவுக்கே ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பதவியை ஏற்கும் முதல் இந்தியப் பெண்மணியாக திருமதி தங்கேஸ்வரி திகழ்கின்றார்.
இன்று பேராக் சட்டமன்றத்தில் தேசிய முன்னணியின் சார்பாக முன்மொழியப்பட்ட தங்கேஸ்வரி, ஒரு வழக்கறிஞராவார்.
சட்டமன்ற அவைத் தலைவருக்கான தேர்தலில் அவரை எதிர்த்து ஜசெகவைச் சேர்ந்த சிவகுமார் போட்டியிட்டார். சிவகுமாருக்கு 24 வாக்குகள் கிடைத்தன. தங்கேஸ்வரிக்கு 30 வாக்குகள் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து 6 வாக்குகள் பெரும்பான்மையில் தங்கேஸ்வரி அதிகாரபூர்வமாக, பேராக் சட்டமன்ற அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.