Home Featured உலகம் நீச்சலில் பெல்ப்ஸ் ஒரே நாளில் 2 தங்கம்! இதுவரை 21!

நீச்சலில் பெல்ப்ஸ் ஒரே நாளில் 2 தங்கம்! இதுவரை 21!

708
0
SHARE
Ad

olympics-michael phelps-

ரியோ டி ஜெனிரோ – அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிரடியாக 2 போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக்சில் அவர் பெற்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று, 200 மீட்டர் தூரத்துக்கான பிரி ஸ்டைல் நீச்சல் பிரிவில் தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற அவர், அதனைத் தொடர்ந்து 4 X 200 பிரி ஸ்டைல் தொடர் நீச்சல் போட்டியிலும் தங்கம் வென்றார். அந்தத் தொடர் நீச்சல் போட்டியில் அமெரிக்கக் குழு தங்கம் பெற, அந்தக் குழுவின் வெற்றிக்கு ஒருவராக பெல்ப்ஸ் செயல்பட்டார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, ரியோ ஒலிம்பிக்சில் தங்கம் வென்றுள்ள பெல்ப்ஸ், இனி அடுத்தடுத்து நிறைய போட்டிகளில் கலந்து கொள்ளவிருப்பதால், தங்க வேட்டையைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.