Home Featured உலகம் ஒலிம்பிக்‌ஸ் : முதல் இடத்தைப் பிடிக்க அமெரிக்கா-சீனா போட்டி!

ஒலிம்பிக்‌ஸ் : முதல் இடத்தைப் பிடிக்க அமெரிக்கா-சீனா போட்டி!

763
0
SHARE
Ad

olympics logo

ரியோ டி ஜெனிரோ – கடந்த 6 நாட்களாக நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், விளையாட்டுத் துறையில் முன்னணியில் இருக்கும் நாடுகள் தங்களின் பதக்க வேட்டைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

நேற்று புதன்கிழமையோடு முடிந்த விளையாட்டுகளில் மீண்டும் அமெரிக்கா தனது முதல் நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 10 தங்கம் உட்பட 28 பதக்கங்களை அமெரிக்கா வெற்றி கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதற்கு அடுத்த நிலையில் நெருங்கி வருகின்றது சீனா. 9 தங்கம் உட்பட 21 பதக்கங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது.

மூன்றாவது நிலையில் வருகின்றது ஜப்பான். மூன்றாவது நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு திடீரென ஜப்பான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 6 தங்கம் உட்பட இதுவரை 17 பதக்கங்களை ஜப்பான் கைப்பற்றியுள்ளது.

olympic medal tally-aug 11

புதன்கிழமை வரையிலான முதல் 10 நாடுகளின் பதக்கப் பட்டியல்