Home Featured உலகம் துபாய் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு – 1 மில்லியன் டாலர் ஜாக்பாட்!

துபாய் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு – 1 மில்லியன் டாலர் ஜாக்பாட்!

1032
0
SHARE
Ad

Dubaiதுபாய் – ‘துன்பத்திற்குப் பிறகு ஒரு இன்பம் உண்டு’ என்று சொல்லுவார்கள்.. துபாயில் வசிக்கும் இந்தியரான மொகமட் பஷீர் அப்துல் காதர் என்பவரின் வாழ்வில் அது உண்மையாகியிருக்கிறது.

விமான விபத்தில் உயிர்தப்பிய அவருக்கு, விமான நிலையத்தில் வாங்கிய லாட்டரி டிக்கெட் 1மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசுத் தொகையைத் தந்துள்ளது.

தனது சொந்த ஊரான கேரளாவில் விடுமுறையைக் கழித்துவிட்டு, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி, திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் விமானத்தில் சென்றார்.

#TamilSchoolmychoice

ஆனால் 300 பயணிகளுடன் சென்ற அவ்விமானம் எதிர்பாராதவிதமாக தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது.

எனினும், அதிர்ஷ்டவசமாக அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர் ஒருவர் மட்டும் மீட்புப் பணியின் போது உயிரிழந்தார்.

இந்நிலையில், விமானப் பயணத்தின் போது டூட்டி ஃபிரி சேவையின் கீழ், மொகமட் பஷீர் அப்துல் காதர் வாங்கி வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டிற்கு 1 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.