Home Featured நாடு “பொறுப்பற்ற பதில்” – சுகாதாரத்துறைக்கு மோகன் ஷான் கண்டனம்!

“பொறுப்பற்ற பதில்” – சுகாதாரத்துறைக்கு மோகன் ஷான் கண்டனம்!

862
0
SHARE
Ad

Mohan-shan-300x264கோலாலம்பூர் – மாட்டிறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள விரும்பாதவர்கள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தனியார் மருத்துவ மையங்களில் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளதற்கு மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவ மையங்களுக்குச் செல்ல வசதியில்லாதவர்கள் தானே அரசாங்க மருத்துவமனைகளைத் தேடி வருகின்றனர். அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் அரசாங்கத்தின் ஆலோசனை பொறுப்பற்ற ஒன்று என இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.

மாட்டிறைச்சி சாப்பிடாத மலேசியர்களுக்கு மாட்டிறைச்சி ஜெலட்டினிலிருந்து உருவாகும் தடுப்பூசிகளைப்  பயன்படுத்தக் கூடாது என அரசாங்கத்திற்கு அண்மையில் மலேசிய இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.