Home Featured கலையுலகம் லாஸ் ஏஞ்சல்சில் நடிகர் ஷாருக் கான் கைது!

லாஸ் ஏஞ்சல்சில் நடிகர் ஷாருக் கான் கைது!

801
0
SHARE
Ad

shah_storyபுதுடில்லி – லாஸ் ஏஞ்சல்ஸ் அனைத்துலக விமான நிலையத்தில், குடிநுழைவு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்காக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அவர் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இரண்டு முறை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

எனினும், இம்முறை எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து இன்னும் விரிவாகத் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

இது குறித்து ஷாருக் கான் இன்று வெள்ளிக்கிழமை தனது டுவிட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்கத் தூதர் இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இது போல் மீண்டும் நடக்காது என அவர் உறுதியளித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2009-ம் ஆண்டிலும், 2012-ம் ஆண்டிலும் ஷாருக் நியூயார்க் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.