Home Featured கலையுலகம் மருத்துவ முகாம்கள் நடத்த விஷால் திட்டம்!

மருத்துவ முகாம்கள் நடத்த விஷால் திட்டம்!

775
0
SHARE
Ad

vishal-imageசென்னை – 2 முறை தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில், மரணமடைந்திருப்பது திரையுலகினரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், நா.முத்துக்குமாரின் மரணத்தை அறிந்த விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “அடக்கடவுளே.. நா. முத்துக்குமார் இறந்துவிட்டார். வேதனையாக உள்ளது. இளம் வயதில் சென்றுவிட்டார். திறமையான பாடலாசிரியர். தங்களைப் பிரிந்து வாடுகிறோம் சகோதரா. மருத்துவ முகாம்கள் நடத்த இதுவே சரியான நேரம்” என்று தெரிவித்துள்ளார்.