பேங்காக் – சில தினங்களுக்கு முன் தாய்லாந்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், மலேசிய செல்பேசி (Cell phone) பயன்படுத்தப்பட்டிருப்பதும், அதன் உரிமையாளரைக் கண்டறிய தாய்லாந்து காவல்துறை மலேசியக் காவல்துறையின் உதவியை நாடியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து தாய்லாந்து காவல்துறைத் தலைவர் ஜெனரல் சக்திப் சைஜிந்தா கூறுகையில், இந்த விவகாரத்தில் மலேசியக் காவல்துறையைத் தொடர்பு கொண்டோம். அவர்களிடமிருந்து நல்ல ஒத்துழைப்பைப் பெற்று வருகின்றோம்” என்று இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.
தென் தாய்லாந்தில் சில தினங்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பில், மலேசிய செல்பேசி தான் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய உதவியிருக்கிறது.
இந்நிலையில், அச்செல்பேசியின் வரிசை எண்ணை மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சிடம் கொடுத்து, அது எங்கிருந்து வந்தது? என்று ஆய்வு செய்து வருகின்றது தாய்லாந்து காவல்துறை.