Home Featured வணிகம் வெண்கலப் பதக்கம் வென்ற அசிசுலுக்கு சைம் டார்பி 1லட்சம் ரிங்கிட் வெகுமதி!

வெண்கலப் பதக்கம் வென்ற அசிசுலுக்கு சைம் டார்பி 1லட்சம் ரிங்கிட் வெகுமதி!

624
0
SHARE
Ad

Azizulhasni awang

கோலாலம்பூர் – ரியோ ஒலிம்பிக்கில், “கெய்ரின்” (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில், மலேசியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்துள்ள அசிசுல் ஹாஸ்னி அவாங்கிற்கு, சைம் டார்பி நிறுவனம் 100,000 ரிங்கிட் (1 லட்சம்) வெகுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து சைம் டார்பி நிறுவனத்தின் ஒய்எஸ்டி தலைவர் மூசா ஹீத்தாம் கூறுகையில், “நீங்கள் உங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். உங்களது சாதனையை அறிந்து மிகவும் பெருமையடைகின்றோம். இறுதிப்போட்டியின் போது ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளுக்கு இடையில், சோர்வடையாமல் கடைசி வரைக் கடுமையாகப் போராடினீர்கள். அச்சூழலில் உங்களுடைய முயற்சி இன்னும் அதிகமான வெற்றிகளைக் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice