Home Featured தொழில் நுட்பம் ஐ.ஓ.எசுக்கான செல்லினம்: கேள்வி-பதில்

ஐ.ஓ.எசுக்கான செல்லினம்: கேள்வி-பதில்

1097
0
SHARE
Ad

Sellinam-Website-Image-(செல்லினம் குறுஞ்செயலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 21 ஆகஸ்ட் 2016-இல் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரையை மீண்டும் செல்லியல் வாசகர்களுக்காக மறு-பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்)

ஐ.ஓ.எசுக்கான செல்லினம் கடந்த வாரம் புத்தம் புதிய பதிகையைக் கண்டது! இதன் புதிய தன்மைகள் குறித்த சில விளக்கங்களை கேள்வி-பதில் வடிவில் இங்கே வழங்குகிறோம்.

இந்தப் பதிகைக்கும் இதற்குமுன் உள்ள பதிகைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

#TamilSchoolmychoice

sellinam-Screen-Shot-1- 21 aug 2016 article

sellinam-Screen-Shot-2- 21 aug 2016-

பழைய பதிகை                                                                   புதிய பதிகை 

ஐ.ஓ.எசுக்கான செல்லினத்தின் முதல் பதிப்பு, 2009 ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது ஐ.ஓ.எசில் தமிழ் எழுத்துகளே இல்லை. தமிழ் எழுத்துகளைத் திரையில் சரிவரத் தோற்றுவிக்கும் வாய்ப்பும் இல்லை. தமிழ் எழுத்துகளைப் படங்களாகவே செல்லினம் தந்தது. அதன்பின் வந்த பதிப்பு, தமிழில் தட்டெழுதுவதற்கான வாய்ப்பைச் சேர்த்தது. இருப்பினும் மற்ற செயலிகளில் தமிழில் எழுதும் வாய்ப்பு ஐ.ஓ.எசின் ஏழாம் பதிப்பில்தான் வந்தது. அதுவும் ஐ.ஓ.எசிலேயே வந்தது. செல்லினம் வழியல்ல. செல்லினத்தின் விசைமுகங்கள்தான் ஐ.ஓ.எசில் சேர்க்கப்பட்டன.

இருப்பினும் ஆண்டிராய்டுக்கான செல்லினம் வழங்கி வந்த சில தன்மைகள் ஐ.ஓ.எசில் இல்லை. ‘பரிந்துரைகள்’, ‘பிழை திருத்தங்கள்’, ‘அடுத்தச் சொல் பரிந்துரை’ போன்ற தன்மைகளே அவை. ஐ.ஓ.எசில் இது ஒரு குறையாகவே இருந்தது. இதனை நிறைவு செய்வதே புதிய செல்லினத்தின் முதன்மையான நோக்கமாகும்.

② இயல்பாகவே ஐ.ஓ.எசில் தமிழ் விசைமுகங்கள் உள்ளனவே. செல்லினம் ஏன்?

செல்லினத்தில் உள்ள ‘அஞ்சல்’, ‘தமிழ்-99’ ஆகிய இருவிசைமுகங்களும் ஐ.ஓ.எசில் இயல்பாகவே உள்ளன. ஆயினும், அவற்றைக் கொண்டு தட்டெழுதும்போது பரிந்துரைகளும், பிழைதிருத்தங்களும் தோன்றுவதில்லை. ஒரு சொல்லை எழுதிவிட்டு வெளி (space) தட்டினால், அடுத்து வரும் சொல்லைக் கணித்துக் கூறும் வாய்ப்பும் இல்லை. இந்தக் குறைகளைச் செல்லினம் நிறைவு செய்கிறது.

sellinam-Screen_Shot-3-21 aug 2016 -

③ செல்லினத்தின் விசைமுகங்களை எப்படி மற்ற செயலிகளில் பயன்படுத்துவது?

இதைச் செய்வது மிகவும் எளிது. படிப்படியான விளக்கங்கள் செல்லினத்திலேயே சேர்க்கப்பட்டுள்ளன. வழிகாட்டி (Guides) பகுதியில் ‘விசைமுகங்களை நிறுவுதல்’ (Installing Keyboards) பக்கத்தில் இவற்றைக் காணலாம்.

sellinam-Screen-Shot-4- 21 aug 2016-

sellinam=Screen-Shot-5- 21 aug 2016-

தமிழ் இடைமுகம்                                                                        ஆங்கில இடைமுகம்

④ “முன்னோட்டம்” (Preview) – இதன் பயன் என்ன?

செல்லினத்தில் உள்ள விசைமுகங்களை மற்றச் செயலிகளில் பயன்படுத்த முதலில் கேள்வி 3இல் குறிப்பிட்டுள்ளதுபோல் நிறுவவேண்டும். அவ்வாறு நிறுவாமலேயே விசைமுகங்களையும், பரிந்துரைகளையும் பார்க்கவேண்டும் என்றால், முன்னோட்டத்தைப் பயன்படுத்தலாம். பழக்கத்திற்கு வந்தபின் மேலே விளக்கப்பட்டுள்ளது போல் நிறுவலாம். நிறுவிய பிறகு மற்ற எல்லாச் செயலிகளிலும் செல்லினத்தைக் கொண்டு தமிழில் எழுதலாம்.

⑤ அணி (Theme) – இவை மற்ற செயலிகளிலும் தோன்றுமா?

நீங்கள் விரும்பி அமைக்கும் அணி, மற்ற செயலிகளிலும் செல்லினம் விசைமுகங்களில் அமையும். ‘Messages’, ‘Notes’ செயலிகளில், செல்லினத்தின் விசைமுகங்கள் ‘நிலம்’, ‘கடல்’ அணிகளோடு தோன்றுவதைக் கீழே காணலாம்.

sellinam-Screen-Shot-6 -21 aug 2016

sellinam-Screen-Shot 7-21 aug 2016-

‘நிலம்’ அணியுடன் அஞ்சல்                                          ‘கடல்’ அணியுடன் தமிழ்-99

⑥ சொற்பட்டியல் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

தமிழில் தட்டெழுதும்போது வழங்கப்படும் பரிந்துரைகள், இந்தச் சொற்பட்டியலில் இருந்துதான் வருகின்றன. இந்தப் பட்டியல் தரவிறக்கப்பட வேண்டும். பாதுகாப்புக் காரணங்களால், இப்பட்டியலைச் செயலியிலேயே சேர்க்க வாய்ப்பில்லை. எனவேதான் தனியாகத் தரவிறக்கப்பட வேண்டும். எனினும், தரவிறக்கத்தைச் செல்லினத்தின் வழியே எளிதாகச் செய்யலாம். ‘விருப்பங்கள்’ (Settings), பகுதிக்குச் சென்று தரவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே தரவிக்கம் செய்யப்பட்டிருந்த சொற்பட்டியலை நீக்கவும் செய்யலாம்.

⑦ செல்லினத்தின் இடைமுக மொழி எனக்குத் தமிழில் இல்லையே! ஏன்?

செல்லினத்தின் இடைமுக மொழி (Interface Language), உங்கள் மொழித் தேர்வை வைத்தே அமையும். தேர்வு ஆங்கிலமாக இருந்தால், ஆங்கிலத்தில் அமையும். தமிழாக இருந்தால் தமிழில் அமையும். இந்தத் தேர்வை, ஐ.ஓ.எசின் ‘Settings’ வழியாகச் செய்யலாம். இதோ வழிமுறை: Settings → General → Language & Region.

sellinam-Screen_Shot 8 - 21 aug 2016-

sellinam-Screen_Shot 9 - 21 aug_2016-

 

நன்றி – செல்லினம்

 

 

 

 

 

 

 

 

 

ர்ர