Home Featured வணிகம் புதிய பெர்சோனா காரை அறிமுகம் செய்தது புரோட்டோன்!

புதிய பெர்சோனா காரை அறிமுகம் செய்தது புரோட்டோன்!

602
0
SHARE
Ad

s8-1471940714-8075-proton-personaஷா ஆலம் – 46,000 ரிங்கிட்டிலிருந்து 59,800 ரிங்கிட் வரையில் விலையுள்ள புதிய பி-செக்மெண்ட் இரக புரோட்டோன் பெர்சோனா காரை புரோட்டோன் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் நிறுவனம் இன்று செவ்வாய்கிழமை அறிமுகம் செய்தது.

இந்தப் புதிய பெர்சோனா புதிய தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டது என்றும், அதிக அதிர்வுகள் மற்றும் கடினத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது என்றும் புரோட்டோன் தலைமை நிர்வாகி டத்தோ அகமட் பாட் கெனாலி தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய வகை, குறைந்த விலையில் மிகவும் ஸ்டைலான, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய காரை எதிர்ப்பார்க்கும் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice