காரணம், கடைசி நாளில் அதிகமான வாடிக்கையாளர்கள் வங்கிகளில் நிறைந்துவிடக் கூடிய வாய்ப்பு இருப்பதால், வங்கி நிறுவனங்கள் கவலை கொள்வதாகவும் பேங்க் நெகாரா குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் படி, நாட்டில் 8 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தங்களது கடன் மற்றும் பற்று அட்டைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
எனவே, வாடிக்கையாளர்கள் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக வங்கிகளிடம் புதிய அட்டைகளை பெற்றுக் கொள்ளும்படி பேங்க் நெகாரா கேட்டுக் கொண்டுள்ளது.