Home Featured நாடு அசிசுல் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு – அகமட் ராசிஃப் அறிவிப்பு!

அசிசுல் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு – அகமட் ராசிஃப் அறிவிப்பு!

799
0
SHARE
Ad

Azizulhasni awangகோலாலம்பூர் – ரியோ ஒலிம்பிக்கில், “கெய்ரின்” (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில், மலேசியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்த அசிசுல்ஹாஸ்னி அவாங், திரெங்கானு அரசு மீது குற்றச்சாட்டிய விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக திரெங்கானு மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இரவு கோலாலம்பூரில் உள்ள உணவுவிடுதி ஒன்றில் அசிசுல்ஹாஸ்னி அவாங்கோடு, இன்னும் இரண்டு திரெங்கானு தடகள விளையாட்டு வீரர்களான பாத்திஹா முஸ்தபா மற்றும் ஹாஃபி மான்சோர் ஆகியோரைச் சந்தித்த அகமட் ராசிஃப் அவர்களுடன் சுமார் இரண்டு மணி நேரம் பேசியுள்ளார்.

அதன் பின்னர் பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், திரெங்கானு இளைஞர்களை தாங்கள் எந்த வகையிலும் அலட்சியப்படுத்தமாட்டோம் என்றும், இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் தவறுகள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர் கூறியிருப்பதாவது:

“நேற்று இரவுஉணவின் போது, என் மனதில் உள்ளவற்றை பாத்திஹா, அசிசுல்ஹஸ்னி மற்றும் ஹாஃபிஃபி ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் இப்படி ஒரு நிலையை அடைய, முன்னதாக அவர்கள் கடந்து வந்த சோதனைகளையும், அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அகமட் ராசிஃப் வெளியிட்ட அறிவிப்பில், ரியோ வெற்றியை முன்னிட்டு அசிசுல்ஹாஸ்னிக்கு மாநில அரசு சில ஊக்கத் தொகைகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.