சிப்பாங் – ரியோ ஒலிம்பிக்கில் மலேசியாவிற்காக விளையாடி, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, இன்று புதன்கிழமை நாடு திரும்பிய வீரர்களுக்கு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பிரதமர் தம்பதியர் உட்பட ஆயிரக்கணக்கான மலேசியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது மனைவி டத்தின் ரோஸ்மா மான்சோரும் வீரர்களை அன்போடு வரவேற்றனர்.
இந்நிலையில், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தலா 200,000 (2 லட்சம் ரிங்கிட்) வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.
“இன்றைய நாள் மலேசியாவிற்கு மிகவும் சிறப்பான நாள். நமது தடகள வீரர்கள் நாடு திரும்புகிறார்கள் அவர்களை மலேசிய மக்களும், அரசாங்கமும் அதிகாரப்பூர்வமாக வரவேற்கவுள்ளது” என்று முன்னதாக பூங்கா ராயா வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நஜிப் தெரிவித்துள்ளார்.