மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ அசாம் பாக்கி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
“கைது செய்யப்பட்டதை நான் உறுதிப்படுத்துகிறேன். நடந்து விசாரணைக்கு உதவும் வகையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ள அசாம், அது குறித்த மேல் விவரங்களைக் கூற மறுத்துவிட்டார்.
நேற்று, மதியம் 1.15 மணியளவில், ஜாலான் ராயாட்டிலுள்ள அலுவலகத்தில், வங்கித் தலைவர் கைது செய்யப்பட்டதாக ‘தி ஸ்டார்’ தெரிவித்துள்ளது.
மேலும், அந்த வங்கியில் சம்பந்தப்பட்ட அதிகாரி வைத்திருந்த 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தையும் விசாரணைக்காக எம்ஏசிசி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, முன்னதாக, கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட வங்கியின் நிர்வாக இயக்குநரான டத்தோ முஸ்தபா அப்துல் ரசாக்கிடமும், தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments