Home Featured நாடு மலேசியா வரும் ராஜபக்சேவுக்கு எதிராக இந்திய அமைப்புகள் போராட்டம்!

மலேசியா வரும் ராஜபக்சேவுக்கு எதிராக இந்திய அமைப்புகள் போராட்டம்!

712
0
SHARE
Ad

PWTCகோலாலம்பூர் – இன்று செப்டம்பர் 1 முதல் 4-ம் தேதி வரையில், மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் (International Conference of Asian Political Parties – ICAPP) இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கலந்து கொள்ளவுள்ளதாக லங்காபுரி, டெய்லிநியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ராஜபக்‌சேவின் மலேசிய வருகையைக் கண்டித்து, இன்று காலை 9.45 மணி முதல், கோலாலம்பூர் புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தின் (பிடபிள்யூடிசி) முன்பு, மலேசியாவிலுள்ள சுமார் 15 இந்திய அரசு சாரா இயக்கங்கள் போராட்டம் நடத்தவுள்ளன.

இத்தகவலை மலேசிய இந்திய கல்வி உருமாற்றுச் சங்கத்தின் தலைவர் இளங்கோவன் அண்ணாமலை இன்று தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

#TamilSchoolmychoice