Home அரசியல் கிட் சியாங் போட்டியிடுவார் என்ற ஆருடங்களால், ஜோகூரில் தே.முவுக்கு ஆதரவு குறையப்போவதில்லை – மகாதீர் கூறுகிறார்

கிட் சியாங் போட்டியிடுவார் என்ற ஆருடங்களால், ஜோகூரில் தே.முவுக்கு ஆதரவு குறையப்போவதில்லை – மகாதீர் கூறுகிறார்

573
0
SHARE
Ad

கோலாலம்பூர் மார்ச் 19 –   13 வது பொதுத்தேர்தலில், ஜசெகவின் தலைவர், லிம் கிட் சியாங் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடுவதாக இருந்தால் அதனால் அம்னோவுக்கோ, பாரிசானுக்கோ எவ்வித பாதிப்பும் நேரப்போவதில்லை என்று  மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.

Lim-Kit-Siang-Sliderலிம் ஜோகூரில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் அவரது வருகையை, போட்டியை ஜோகூர் மட்டுமல்ல, கட்சியும் எதிர்பார்த்திருப்பதாக மகாதீர் கிண்டல் செய்யும் தொனியில் கூறினார்.

அம்னோவின் கோட்டையான தெற்கு மாநிலங்களை குறிவைத்து, மத்திய ஈப்போ எம்.பி. களமிறக்கப்பட்டிருக்கிறாரா என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மகாதீர், அவரால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியாது என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

 லிம் தொகுதி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போதைய மசீசவின் தொகுதியான கேலாங் பத்தா தொகுதியில் லிம் போட்டியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு ஸ்கூடாயில் நடைபெறும் நிகழ்வில் லிம் உள்பட பாக்காத்தான் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஜசெகவின் 47வது ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, செய்யப்படும் என நம்பப்படுகிறது.

54 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 34 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், 12 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்டுள்ள கேலாங் பத்தா தொகுதியைத் தவிர்த்து,  குளுவாங், மற்றும் கூலாய் தொகுதிகளை, ஜசெக குறிவைத்திருக்கிறது.

பினாங்கு மற்றும் பேராவில் கையாண்ட வியூகத்தைப் போலவே எதிர்க்கட்சியின் ஆளுமையை விரிவாக்கவே லிம் இப்போது ஜோகூரிலும் அடியெடுத்துவைத்திருக்கிறார்,