Home Featured நாடு ஜிக்காவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதியில்லை – சுப்ரா விளக்கம்!

ஜிக்காவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதியில்லை – சுப்ரா விளக்கம்!

585
0
SHARE
Ad

s-subramaniam1-020713_484_321_100கோலாலம்பூர் – ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், கருக்கலைப்பு செய்ய தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், எல்லா மாநில முஃப்டிகளிடமிருந்தும் அனுமதி பெற்றால் மட்டுமே அது அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளித்துள்ள கூட்டரசுப் பிரதேச முஃப்டி டத்தோ டாக்டர் சுல்கிப்ளி மொகமட் அல் – பக்ரியின் முடிவை வரவேற்பதாகக் கூறியுள்ள டாக்டர் சுப்ரா, தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே, அதை அனுமதிக்க சட்டத்தில் இடமுள்ளது, குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அல்ல என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதோடு, கூட்டரசுப் பிரதேச முஃப்டி இதை அனுமதிப்பதாக இருந்தால், எல்லா மாநில முஃப்டிகளும் இந்த விவகாரத்தில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice