Home Featured உலகம் மிருகக்காட்சி சாலையில் பெண் மாயம் – தேடுதல் பணிகள் தீவிரம்!

மிருகக்காட்சி சாலையில் பெண் மாயம் – தேடுதல் பணிகள் தீவிரம்!

832
0
SHARE
Ad

zooசோன் புரி (தாய்லாந்து) – தாய்லாந்தில் சோன்புரி என்ற இடத்தில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில், மாயமான சீன சுற்றுலாப் பயணியைத் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கடைசியாக அவர், அம்மிருகக்காட்சி சாலையிலுள்ள முதலைகள் இருப்பிடத்திற்கு அருகில் காணப்பட்டதாகக் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காவ் லி பிங் (வயது 36) என்ற சீனாவைச் சேர்ந்த அப்பெண் சுற்றுலாப் பயணியை 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினரும் தேடி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கணவருடன் விவாகரத்துப் பெற்றவரான காவ் லி பிங், மிகவும் கவலையாகக் காணப்பட்டார் என்றும், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றது.