Home Featured உலகம் தான்சேனியாவில் கண்டெடுக்கப்பட்ட இறக்கைப் பகுதி எம்எச் 370 விமானப் பாகம்தான்!

தான்சேனியாவில் கண்டெடுக்கப்பட்ட இறக்கைப் பகுதி எம்எச் 370 விமானப் பாகம்தான்!

1645
0
SHARE
Ad

mh370-debris-tanzania-atsb-inspecting

சிட்னி – ஆப்பிரிக்க நாடான தான்சேனியா கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் இறக்கைப் பகுதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான எம்எச் 370 விமானத்தின் பாகம்தான் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த உடைந்த விமானப் பாகம் கடந்த ஜூன் மாதத்தில் பெம்பா என்ற தீவுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. எம்எச் 370 விமானம் கடலில் விழுந்ததாக நம்பப்படும் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தாண்டியுள்ள ஒரு பகுதியில் இந்த உடைந்த விமானப் பாகம் கண்டெடுக்கப்பட்டதுதான் அதிசயமாகும்.

#TamilSchoolmychoice

இன்று வியாழக்கிழமை ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு இலாகா வெளியிட்ட அறிக்கையின் படி, உடைந்த விமானப் பாகத்தின் வரிசை எண் காணாமல் போன போயிங் 777 ரக விமானத்தினுடையதுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

MH370

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட எம்எச் 370 விமானம் அடுத்த அரை மணி நேரத்தில் விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் (ராடார்) பார்வையிலிருந்து மறைந்தது. அந்த விமானத்தில் 227 பயணிகளும் 12 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.

கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம் எம்எச் 370 விமானப் பாகம்தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில் இதைவைத்து, அந்த விமானம் எவ்வாறு விழுந்திருக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.