Home Featured நாடு கவலைக்கிடமான நிலையில் பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாருண் டின்!

கவலைக்கிடமான நிலையில் பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாருண் டின்!

685
0
SHARE
Ad

 

haron-din-pas

கோலாலம்பூர் – பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் டத்தோ டாக்டர் ஹாருண் டின் சுயநினைவை இழந்து கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாகப் பாஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

கிளந்தான் மந்திரிபெசாராக இருந்த தோக் குரு நிக் அசிஸ் காலமானதைத் தொடர்ந்து, பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவராக நியமனம் பெற்றவர் ஹாருண் டின் (படம்). பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

 

தற்போது அவர் இருதய நோய் காரணமாக, அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்போது அவர் சுயநினைவை இழந்து விட்டதாகவும், மோசமான முறையில் இரத்தக் கசிவு அவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், உயிர்க் காப்பு கருவியின் துணையோடு இருந்து வரும் அவருக்கு மிக விரைவில் உயிர்க் காப்பு கருவி அகற்றப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.