சென்னை – கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, காவிரி நதிநீர் பங்கிடுவதில் கர்நாடகத்தின் போக்கு ஆகியவற்றைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுக்க முழு கடையடைப்பு, பேரணிகள், இரயில் மறியல்கள் நடைபெற்றன.
கர்நாடகத்தினர் யாரும் தாக்கப்படாமல், கர்நாடக வாகனங்கள் எதுவும் எரிக்கப்படாமல், தமிழர்கள் கண்ணியம் காத்த அதே வேளையில், தங்களின் வலுவான எதிர்ப்புக் குரல்களையும், கண்டனங்களையும் தமிழக அரசியல் தலைவர்களும் போராட்டவாதிகளும் பதிவு செய்தனர்.
அந்தப் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:
வைகோ இல்லாத தமிழர் போராட்டமா? திருச்சியில் பேரணியை முழக்கத்துடன் வழிநடத்திச் சென்ற வைகோ!
கைது செய்யப்பட்டு காவல் துறை வாகனத்தில் ஏற்றப்படும் வைகோ! இருந்தாலும் முழக்கம் தொடரும்!
கடைகள் சென்னை முழுக்க மூடப்பட்டிருந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பொதுப் போக்குவரத்துகளும் சுமுகமாக இயங்கின.
தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்…
கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும் ஸ்டாலின்…
விஜய்காந்த் மனைவி பிரேமலதா தலைமையில் சென்னை கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற கண்டனக் கூட்டம்…
திமுக மகளிரணித் தலைவர் கனிமொழியும் சென்னையில் கண்டனப் பேரணியில் ஈடுபட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்….
கைது செய்யப்பட்டு பேருந்து ஒன்றில் அழைத்துச் செல்லப்படும் கனிமொழி
பல வியாபாரிகளும், வணிக இயக்கங்களும் நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது…
உ