Home Featured உலகம் 29 பேர் காயம்! ஒருவர் கவலைக்கிடம்! மான்ஹாட்டன் வெடிவிபத்து பயங்கரவாதச் செயல் அல்ல!

29 பேர் காயம்! ஒருவர் கவலைக்கிடம்! மான்ஹாட்டன் வெடிவிபத்து பயங்கரவாதச் செயல் அல்ல!

727
0
SHARE
Ad

new-york-manhatten-bomb-17-sept

நியூயார்க் – அமெரிக்க நேரப்படி நேற்றிரவு நியூயார்க் நகரின் மான்ஹாட்டன் பகுதியில் நிகழ்ந்த வெடிச் சம்பவம் குப்பைத் தொட்டியில் கிடந்த இரண்டு சாதனங்களால் ஏற்பட்டது என்றும் இது பயங்கரவாதச் செயல் அல்ல என்றும் நியூயார்க் காவல் துறையினர் அறிவித்துள்ளனர் (மேலே படம்: நன்றி – டுவிட்டர்)

இதுவரை 29 பேர் இந்த வெடிச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். ஒருவரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

செல்சி குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் குப்பைத் தொட்டியில் கிடந்த சாதனங்களால் இந்த வெடிச் சம்பவம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நூற்றுகணக்கானோர் சம்பவம் நடந்த இடத்திலிருந்து அச்சத்துடன் நாலாபுறமும் ஓடி வெளியேறிய வேளையில், காவல் துறையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டு தங்களின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்தனர்.

காவல் துறையின் மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு மேலும் வெடிகுண்டுப் பொருட்கள் ஏதாவது இருக்கின்றதா எனக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டன.

இரண்டாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் ஒரு ‘பிரஷர் குக்கர்’ போன்ற மின்சார சாதனம் என்றும், அதனுடன் ஒரு செல்பேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதன்காரணமாக வெடிவிபத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பொருள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.