Home Featured நாடு மகாதீர்-அன்வார் இணைந்து கையெழுத்திட்டு கூட்டறிக்கை!

மகாதீர்-அன்வார் இணைந்து கையெழுத்திட்டு கூட்டறிக்கை!

608
0
SHARE
Ad

mahathir-anwar-ibrahim

கோலாலம்பூர் – அரசியலில் பரமை வைரிகளான முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டும், முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இணைந்து கையெழுத்திட்டு, தேசியப் பாதுகாப்பு மன்ற சட்டம் குறித்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

மலேசிய அரசியல் வட்டாரங்களில் இவர்கள் இருவரும் இனி இணைந்து நஜிப்புக்கு எதிரான அரசியல் போராட்டத்தைத் தொடர்வர் என்பதற்கான மற்றொரு உதாரணமாக இந்த கூட்டறிக்கை திகழ்கின்றது.

#TamilSchoolmychoice

தேசியப் பாதுகாப்பு மன்ற சட்டத்தால் நாடு தற்போது நாடளாவிய நெருக்கடி நிலைமையில் சிக்கியுள்ளது என்றும் மக்கள் நலன்காக்க தாங்கள் இருவரும் இணைந்து இந்த கூட்டறிக்கையை விடுப்பதாகவும் மகாதீர்-அன்வார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் சுதந்திரம் குறித்த ஒரு விவகாரத்தில் மாமன்னரின் அதிகாரமும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் அதிகாரமும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் இருவரும் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவே, எழுந்துள்ள தேசிய நெருக்கடி நிலைமை காரணமாக, மாற்றத்தையும், சீர்திருத்தத்தையும் கொண்டுவரவும், மக்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் நிலைநாட்டவும், நமது நேசத்துக்குரிய நாட்டை மறுநிர்மாணிப்பு செய்யவும் மக்களுடன் இணைந்து இந்த சட்டத்திற்கு எதிராக போராட முன்வந்துள்ளதாகவும் அவர்கள் இருவரும் தங்களின் கூட்டறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.

இன்று வழக்கு ஒன்றிற்காக கோலாலம்பூர் நீதிமன்றம் வந்த அன்வார் இப்ராகிம் கூட்டறிக்கையில் தான் கையெழுத்திட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.