Home Featured உலகம் நியூயார்க் குண்டுவெடிப்பு: அகமட் கான் ரஹாமி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு!

நியூயார்க் குண்டுவெடிப்பு: அகமட் கான் ரஹாமி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு!

687
0
SHARE
Ad

new-york-bomber-rahami-arrested

நியூயார்க் – அமெரிக்கக் காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ள அகமட் கான் ரஹாமி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் நியூ ஜெர்சி, லிண்டன் என்ற இடத்தில் பிடிபட்ட ரஹாமி தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கின்றான். காவல் துறையினருடன் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைக் கொல்ல முயற்சி செய்ததாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

காவல் துறையினருக்கு அவன் இதுவரை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அவன் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, 29 பேர்களை காயங்களுக்கு உள்ளாக்கிய – சனிக்கிழமை நடைபெற்ற – நியூயார்க் குண்டுவெடிப்புகள் பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அவன் அடிக்கடி ஆப்கானிஸ்தான் சென்று வந்திருக்கின்றான் என்றும் அவனுக்கு பாகிஸ்தானிய மனைவி இருக்கிறார் என்பதும் முதல் கட்டத் தகவல்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன.