Home Featured நாடு பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு: கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறது!

பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு: கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறது!

1133
0
SHARE
Ad

Rough-seas-ஈப்போ – சிலாங்கூர், பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் விரைவில் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயறும் படி தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தியுள்ளது.

காரணம், வரும் அக்டோபர் 14 -ம் தேதி முதல் 19-ம் தேதி வரையில் கடலில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என தேசியப் பேரிடர் மேலாண்மை மையத்தின் பொது இயக்குநர் டத்தோ சைன்துன் அப்துல் சமத் தெரிவித்துள்ளார்.