Home Featured கலையுலகம் அஜித் பெயரைப் பயன்படுத்தி புகழ் தேடுகிறேனா? – சிம்பு விளக்கம்!

அஜித் பெயரைப் பயன்படுத்தி புகழ் தேடுகிறேனா? – சிம்பு விளக்கம்!

991
0
SHARE
Ad

simbu-600x300சென்னை – இனிமேல் தனது படங்களில் தல அஜித் அவர்களின் வசனங்களையோ அல்லது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையோ வைக்கப் போவதில்லை என்று நடிகர் சிம்பு கூறியது சில தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தைத் திறந்த சிம்பு, பின்னர் தனது ரசிகர்களுடன் உரையாடினார்.

உங்கள் அண்மைய படங்களில் ஏன் அஜித் அவர்களைப் பற்றிய காட்சிகளை வைப்பதில்லை? என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிம்பு, “அன்று அஜித்தைப் பற்றி யாரும் பேசாத சமயத்தில், அவரது தோல்விப் படத்தின் கட்டவுட்டை எனது படத்தில் வைத்து, அஜித் என்று கத்தினேன். இப்போது அவர் மிகப் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டார். எல்லோரும் அவரது பெயரைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் இனி அவரது பெயரைப் பயன்படுத்த வேண்டிய தேவை எனக்கு இல்லை. அவரது வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்” என்று பதிலளித்தார்.

#TamilSchoolmychoice

அது அஜித் ரசிகர்களில் ஒரு தரப்பினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு பேசுவது எப்படி இருக்கிறது என்றால், அஜித்தைப் பெரிய ஆளாக ஆக்கிவிட்டதே அவர் தான் என்பது போல் இருக்கிறது என்று சிலர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். அதோடு சிலர், அஜித்தைப் பயன்படுத்தி தான் அவர் புகழ்பெற்றதாக கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில், அது குறித்து சிம்பு காணொளி வடிவில் விளக்கமளித்துள்ளார். அதனை இங்கே காணலாம்.

https://www.youtube.com/watch?v=GtBb3feWLjg