Home Featured கலையுலகம் ஜிம் கேரி மூலம் பரவிய பால்வினை நோய் – தற்கொலைக்கு முன் காதலி உருக்கமான கடிதம்!

ஜிம் கேரி மூலம் பரவிய பால்வினை நோய் – தற்கொலைக்கு முன் காதலி உருக்கமான கடிதம்!

791
0
SHARE
Ad

cathriona-white-and-jim-carreyலாஸ் ஏஞ்சல்ஸ் – ‘தி மாஸ்க்’, ‘ஏஸ் வென்ச்சுரா’, ‘ப்ரூஸ் ஆல்மைட்டி’, ‘எஸ் மேன்’, ‘பேட்மேன் ஃபாரெவர்’ போன்ற படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றவர் நடிகர் ஜிம்கேரி.

அவரது காதலியும், ஒப்பனைக் கலைஞருமான கேத்ரியோனா வைட் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது திடீர் தற்கொலைக்கான காரணம், அதிக மன உளைச்சலும், ஜிம் கேரியுடனான பிரிவும் தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கேத்ரியோனாவின் முன்னாள் கணவர் மார்க் பட்லெர் மூலமாகப் பல புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

ஜிம் கேரி தனக்கு இருந்த பாலிவினை நோய்களை மறைத்து, உடலுறவின் மூலம் கேத்ரியோனாவிற்கு ஹெர்பிஸ் வகை 1, 2 மற்றும் கொனோர்ஹியா ஆகிய பால்வினை நோய்களை பரப்பியுள்ளார் என்ற குற்றச்சாட்டு தான் ஹாலிவுட்டை அதிரச் செய்துள்ளது.

ஜிம் கேரிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள மார்க் பட்லெர், அதற்கு ஆதாரமாக, ஜிம் கேரிக்கும், கேத்ரியோனாவுக்கும் இடையே நடந்த வாட்சாப் உரையாடல்களையும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடைசியாக கேத்ரியோனா எழுதியுள்ள உருக்கமான கடிதத்தையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

அவர்களுக்கு இடையில் நடந்துள்ள வாட்சாப் உரையாடல்களில், உடலுறவு கொண்ட மறுநாள், கேத்ரியோனாவை ஒரு குறிப்பிட்ட மருந்தை உட்கொள்ளும் படிக் கூறியுள்ளார் ஜிம்.

அடுத்த சில நாட்களில் தனது பிறப்புறுப்பில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கட்டிகள் தோன்றுவதாக கேத்ரியோனா ஜிம்மிடம் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள ஜிம், அது வழக்கமாக உடலுறவுக்குப் பின் எல்லோருக்கும் வருவது தான் என்று சமாதானம் செய்துள்ளார்.

அடுத்தடுத்த உரையாடல்களில் இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்கிடையில் பல வாக்குவாதங்கள் நடந்துள்ளன.

letterகடைசியாக கேத்ரியோனா ஜிம்முக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எனக்கு 27 வயதாகிறது. என்னிடம் விட்டுச் செல்லப்பட்டவை அனைத்தும்  வெறும் கிளிஞ்சல்களும், சேதமடைந்தவைகளும் தான். மனப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் என்னைத் திருப்பி எடுக்க நினைக்கிறேன்.   மோசமான அனுபவங்களையும், காதல் முறிவையும் அடைந்தவர்களுக்கு அது மிகவும் கடினம் தான். ஆனால் காலம் கடந்து, ஒரு புதிய மனிதரைச் சந்திக்கும் போது, அது மீண்டும் தொடங்கும். ஆனால் இந்த நோயுடன், என்னால் எப்படி வாழ்க்கையை நகர்த்த முடியும்? எப்படி ஒரு புதியவரைச் சந்திக்க முடியும்?”

“நான் சேதமடைந்துவிட்டேன். அறுவெறுக்கும் வகையில் இருக்கிறேன். நான் குளிக்கும் நான் நோய்வாய்ப்பட்டவளாக உணர்கிறேன்” என்று கேத்ரியோனோ கடந்த 2015 ஆண்டு கடிதம் எழுதியுள்ளார்.

அதன் பின்பு கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுமார் 3 நிமிடங்கள் நடிகர் ஜிம் கேரியுடன் செல்பேசியில் பேசியுள்ளார் கேத்ரியோனா.

இந்நிலையில், மார்க் பட்லெர் ஜிம் கேரி மீது தொடுத்துள்ள இந்த வழக்கு பணத்திற்காகத் தான் என்ற பேச்சு எழுந்ததற்குப் பதிலளித்துள்ள மார்க், “ஜிம் கேரி பெண்களை எப்படி நடத்துகிறார். அவரது உண்மையான முகம் என்ன? என்பதை உலகிற்குத் தெரிய வைக்கவே இந்த வழக்கு” என்று தெரிவித்துள்ளார்.