Home Featured இந்தியா தமிழ்நாட்டுக்கு 2000 கன அடி நீர்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டுக்கு 2000 கன அடி நீர்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

904
0
SHARE
Ad

cauvery-supreme court india

புதுடில்லி – காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கூடி, கர்நாடக மாநிலம் தினசரி 2000 கன அடி நீரை தமிழ் நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று இடைக்கால உத்தரவு வழங்கியது.

தனது அடுத்த கட்ட தீர்ப்பு வரும் வரை இந்த முடிவை செயல்படுத்தும்படியும் உச்ச நீதிமன்றம் கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதே வேளையில் இரு மாநில அரசாங்கங்களும் அமைதியையும், புரிந்துணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் மதிக்கும் பண்பு கடைப்பிடக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்தது.