Home Featured உலகம் ஹிலாரி-டிரம்ப் இடையில் சூடு பறக்கும் 3-வது விவாத மோதல்!

ஹிலாரி-டிரம்ப் இடையில் சூடு பறக்கும் 3-வது விவாத மோதல்!

1030
0
SHARE
Ad

us-presidential-debate-hilary-trump

லாஸ் வெகாஸ் – சூதாட்ட விடுதிகளுக்கு புகழ்பெற்ற  அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரம் அமெரிக்க அதிபர்களுக்கான வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப் – ஹிலாரி கிளிண்டன் இருவருக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை நடைபெறப் போகும் சூடு பறக்கும் மூன்றாவது இறுதி நேரடி விவாதத்தின் களமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

லாஸ் வெகாஸ் பல்கலைக் கழகத்தில், நடைபெறவிருக்கும் இந்த விவாதம் அனைத்து முக்கிய அனைத்துலக தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் மலேசிய நேரப்படி காலை 9.00 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகும்.

#TamilSchoolmychoice

கோடிக்கணக்கான அமெரிக்கர்களும், உலக மக்களும் இந்த நேரலை விவாதத்தை ஆர்வத்துடன் பார்ப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக வேட்பாளர்கள் இருவருக்கும் இடையிலான இறுதி மோதல் இது, என்பதாலும், டிரம்ப் மீது எழுந்துள்ள அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் காரணமாகவும் இன்றைய விவாதம் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகின்றது.