சுங்கைப்பட்டாணி – இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டின் முதல் அங்கமாக காலை 8.00 மணியளவில், 21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வி என்ற தலைப்பிலான உரைகள் இடம் பெற்றன.
21ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வி அங்கத்தில் பங்கு பெற்றவர்கள் (இடமிருந்து) நெறியாளராகப் பணியாற்றிய மலாயாப் பல்கலைக் கழகத்தின் முனைவர் இரா. மோகன்தாஸ் இந்தியாவைச் சேர்ந்த ந.தெய்வசுந்தரம், பிரதமர் துறையின் தமிழ்ப் பள்ளிகளுக்கான திட்ட வரைவு இயக்குநர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வே.இளஞ்செழியன், சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சாமிக்கண்ணு ஆகியோர்…
மாநாட்டுக்கு வர முடியாவிட்டாலும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் பார்த்திபன் கந்தசாமி, ஸ்கைப் எனப்படும் இணையக் காணொளி மூலம் தனது கட்டுரையைப் படைத்தார்.
ஏற்பாட்டுக் குழு செயலவை உறுப்பினரான மலேசியாவைச் சேர்ந்த சுப்ரமணி மாநாட்டில் உரையாற்றுகின்றார்.
21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வி அங்கத்தில் உரையாற்றும் சிங்கையைச் சேர்ந்த சாமிக்கண்ணு. இவர் சிங்கை தமிழாசிரியர் சங்கத்தின் தலைவருமாவார்.
21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வி அங்கத்தில் உரையாற்றிய முனைவர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன். பிரதமர் துறை அமைச்சின் தமிழ்ப் பள்ளிகளுக்கான திட்ட வரைவு இயக்குநரான இராஜேந்திரன், செடிக் எனப்படும் சமூக இயக்கங்களுக்கான நிதி உதவித் திட்டத்துக்கான பொறுப்பாளராகவும் செயல்படுகின்றார்.
(மேலும் செய்திகள் தொடரும்)