Home Featured நாடு டான்ஸ்ரீ எல்.கிருஷ்ணனின் 94-வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

டான்ஸ்ரீ எல்.கிருஷ்ணனின் 94-வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

914
0
SHARE
Ad

krishnan-l-tan-sri-94-birthday-high-commissioner

கோலாலம்பூர் – நாடறிந்த வணிகப் பிரமுகரும், நிறைய அறப்பணிகள் செய்து வருபவருமான டான்ஸ்ரீ டத்தோ எல்.கிருஷ்ணன் தனது 94-வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்.

மலேசியத் திரைப்பட உலகுக்கு அளப்பரிய பணிகள், பங்களிப்பை வழங்கியவர் எல்.கிருஷ்ணன். அதற்காக அவருக்கு 2016-ஆம் ஆண்டுக்கான மெர்டேக்கா விருது வழங்கப்பட்டுள்ளது அவருடைய 94-வது வயதில் கிடைத்திருக்கும் மற்றொரு சிறப்பாகும்.

#TamilSchoolmychoice

எல். கிருஷ்ணனின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, தனது இல்லத்தில் விருந்துபசரிப்பு நடத்தி கௌரவித்தார். அந்த விருந்தில் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமசுந்தரமும் மற்றும் எல்.கிருஷ்ணனுக்கு நெருக்கமான நண்பர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எல்.கிருஷ்ணன் இளம் வயதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து பணியாற்றிய பின்னணியையும் கொண்டவராவார்.