Home Featured கலையுலகம் ஐஸ்வர்யாவுடனான நெருக்கமான காட்சிகள் – ரன்பீர் கருத்தால் அமிதாப் குடும்பம் அதிருப்தி!

ஐஸ்வர்யாவுடனான நெருக்கமான காட்சிகள் – ரன்பீர் கருத்தால் அமிதாப் குடும்பம் அதிருப்தி!

859
0
SHARE
Ad

ranbirபுதுடெல்லி – ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘ஏ தில் ஹை முஷ்கில்’ திரைப்படம், கடந்த அக்டோபர் 28-ம் தேதி, வெளியாகி, வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமாக நடித்தது குறித்து ரன்பீர் கபூர் வெளியிட்ட கருத்து, அமிதாப் குடும்பத்தை முகம் சுளிக்க வைத்துள்ளதோடு, அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வானொலி ஒன்றிற்குப் பேட்டியளித்த ரன்பீர் கபூர் அத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தது குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“முதலில் நான் மிகவும் தயங்கினேன். என் கைகள் நடுங்கின. அவரது கன்னத்தைத் தொடக் கூடத் தயங்கினேன். ஆனால் ஐஸ்வர்யா என்னிடம், “உனக்கு என்ன ஆனது? நாம் நடிக்கிறோம் அவ்வளவு தான். அதை ஒழுங்காக செய்” என்று கூறினார். இன்னொரு முறை இந்த வாய்ப்பு கிடைக்காது என்பதால் பயன்படுத்திக் கொண்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து அமிதாப் குடும்பத்தை மிகவும் அதிருப்தியடையச் செய்துள்ளது. தங்களது குடும்பத்தில் அனைவருமே சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள் தான். இது போன்ற காட்சிகள் நடிப்பு என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் ரன்பீர் தெரிவித்துள்ள கருத்து, மிகவும் மிகையாக உள்ளது என்று தெரிவித்துள்ளதாக அமிதாப் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ள ரன்பீர், “ஐஸ்வர்யா ராய் மிகச் சிறந்த நடிகை என்பதோடு, அவர் எங்களது குடும்ப நண்பரும் கூட. இந்தியாவின் மிகச் சிறந்த திறமைசாலியும் மரியாதைக்குரிய பெண்ணும் ஆவார். ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். நான் ஒருபோதும் அவரை அவமதிக்கவில்லை” என்று கூறியுள்ள ரன்பீர், தனது கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.