Home Featured நாடு மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு 20 ரிங்கிட் கட்டணம்!

மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு 20 ரிங்கிட் கட்டணம்!

731
0
SHARE
Ad

Singapore Woodlands checkpointகோலாலம்பூர் – ஜோகூர் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டுப் பதிவு பெற்ற வாகனங்களுக்கும் சாலைக் கட்டணமாக (Road Charge) 20 ரிங்கிட் வசூலிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டணம் நாளை நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

ஜோகூரில் காஸ்வே மற்றும் இரண்டாவது இணைப்பின் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

மோட்டார் வாகனமோட்டிகள் ஒவ்வொரு முறை மலேசியாவிற்குள் நுழையும் போதும், இந்த சாலைக் கட்டணம் ‘டச் அண்ட் கோ’ அட்டை மூலமாக வசூலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.