Home Featured நாடு மலேசியாகினி அலுவலகம் முன்பு சிவப்புச் சட்டை அணி திடீர் பேரணி!

மலேசியாகினி அலுவலகம் முன்பு சிவப்புச் சட்டை அணி திடீர் பேரணி!

1187
0
SHARE
Ad

malaysiakiniகோலாலம்பூர் – மலேசியாகினி அலுவலகம் முன்பு சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோ ஜமால் யூனுஸ் தலைமையில், சிவப்புச் சட்டை அணிந்த 50 பேர் இன்று வியாழக்கிழமை திடீர் பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோரோஸ் நிதிக்கு விளக்கம் கேட்டு இப்பேரணி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

அதனையடுத்து, ஜமால் உட்பட 10 பேர், மலேசியாகினி நிர்வாக ஆசிரியரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டு, பேச்சு வார்த்தை நடைபெற்றதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வரும் சனிக்கிழமை மலேசியாகினி அலுவலகம் முன்பு பேரணி நடத்தப் போவதாக, ஜமால் தரப்பிலிருந்து முந்தைய அறிவிப்புகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.