Home 13வது பொதுத் தேர்தல் லாபிஸ் தொகுதி:ஜசெகவின் ஹியூ குவான் இயூ மசீசவின் சோய் தீ யோங்கை எதிர்த்துப் போட்டி!

லாபிஸ் தொகுதி:ஜசெகவின் ஹியூ குவான் இயூ மசீசவின் சோய் தீ யோங்கை எதிர்த்துப் போட்டி!

837
0
SHARE
Ad

Hew-Kuan-Yew-DAP-Sliderஜோகூர், மார்ச் 20 –  எதிர்வரும் 13 வது நாடாளுமன்றத்தேர்தலில் கேலாங் பத்தா தொகுதி வேட்பாளராக ஜசெக வின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான லிம் கிட் சியாங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின், எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தை கைப்பற்றும் நோக்கில் அந்த கட்சியில் பிரச்சார பீரங்கிகளாக கருதப்படும் பல முக்கிய தலைவர்களை ஜோகூர் மாநிலத்தின் வேட்பாளர்களாக நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

‘சூப்பர் மேன்’ என்று கட்சியைச் சேர்ந்தவர்களாலும், ஆதரவாளர்களாலும் அழைக்கப்படும் ஜசெக  தலைவர்களில் ஒருவரான ஹியூ குவான் இயூ (படம்),கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தம்மை மசீசவிற்கு பெருமளவு ஆதரவுள்ள தொகுதியான லாபீஸ் தெகுதியில் போட்டியிடச்சொல்வதாகவும், தாம் அது பற்றி யோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹியூ இவ்விஷயம் குறித்த அபிப்ராயங்களை, முகநூல் மூலம் திரட்ட முடிவு செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

வரும் தேர்தலில் லிம் கிட் சியாங்கின், தெற்கில் கவனம் செலுத்தும் வியூகத்திற்கு ஏற்ப தம்மை லிம் குவான் எங் லாபீஸில் மசீசவின் தலைவர் சுவா சோய் லெக்கின் புதல்வர்  சுவா தீ யோங்கை (முகப்பு படம்) எதிர்த்துப் போட்டியிடும்படி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகவும் ஹியூ தெரிவித்துள்ளார்.

தம்முடைய முடிவைத் தெரிவித்தவின் பகிரங்க அறிவுப்புச் செய்யப்போவதாக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ள போதும், தமக்கு இது பற்றி யோசிக்க அவகாசம் வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு மாற்று அரசு அமைய தமது பங்கு, வேட்பாளராக இருந்தால் சிறக்குமா அல்லது சுதந்திரமாக எல்லா இடங்களுக்கும் சென்று பரப்புரை செய்வது உகந்ததா என்று முகநூல் அன்பர்களிடம் அபிப்ராயம் கேட்டு தமது கேள்வியை அவர் பதிவு செய்திருந்தார்.

இருவிதமான அபிப்ராயங்கள்

தாம் கேட்டுக்கொண்டபடி முகநூலில் ஒரு சாரார் ஹியூ வேட்பாளராக நிற்க வற்புறுத்தியள்ளதாகவும், மற்றும் சிலர் நாடு முழுவதும் சென்று பரப்புரை செய்யச் சொல்வதாகவும் தெரிவித்தார்.

ம.சீ.சவின் சுவா தீ யோங் 2008 தேர்தலில், புறநகர்ப் பகுதி நகரமான லாபீஸில் 4094 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவராவார்

ஆபாசவீடியோ சர்ச்சையில் சிக்கி தனது, அரசு- கட்சிப்பதவிகளை சோய் லெக் துறந்தபோது அவர் மகன் தீ யோங்  அவ்விடத்தைப் பிடித்தார். ஆனால் சோய் லெக் வெற்றிகரமாக 2010ல் கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார்.