Home Featured நாடு ஜோகூர் சுல்தான் பற்றிய கருத்துக்கு சதீஸ் முனியாண்டி மன்னிப்பு!

ஜோகூர் சுல்தான் பற்றிய கருத்துக்கு சதீஸ் முனியாண்டி மன்னிப்பு!

582
0
SHARE
Ad

Johor Sultanஜார்ஜ் டவுன் – ஜோகூர் சுல்தான் பற்றிய தனது பேஸ்புக் கருத்திற்காக செப்ராங் பிறை மாநகர சபை உறுப்பினரும், பேராசிரியர் பி.இராமசாமியின் செயலாளருமான சதீஸ் முனியாண்டி மன்னிப்பு கேட்டுள்ளார்.

“நான் ஆட்சியாளரை அவமதிக்கும் நோக்கத்தில் அக்கருத்தைத் தெரிவிக்கவில்லை. அக்கருத்து அநாகரிகமாகத் தெரிவதால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று சதீஸ் முனியாண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் படி, ஒன்று கூடுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால், ஜோகூரில் பேரணி நடத்துவதைத் தடுக்க ஜோகூர் சுல்தானுக்கு உரிமை கிடையாது என்று தான் கூறிய கருத்தை மீட்டுக் கொள்வதாக சதீஸ் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, சதீஸ் வெளியிட்டுள்ள இக்கருத்தை ஜசெக தலைமைத்துவம் விரும்பவில்லை என பினாங்கு துணை முதல்வர் (2) பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், சுல்தானுக்கு எதிரான கருத்தை சதீஸ் தெரிவித்திருக்கக் கூடாது என்றும், அவர் அதற்காக மன்னிப்புக் கேட்பதே நல்லது என்றும் இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பாசிர் கூடாங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோகூர் சுல்தான், பொதுமக்களுக்கு இடையூறு விளைக்கும், அவர்களைப் பிளவுபடுத்தும் வீதிப் பேரணிகளுக்கு ஜோகூரில் அனுமதி கிடையாது என்று தெரிவித்தார்.

அது போன்ற பேரணிகளில் அரசாங்கம் அல்லாத அமைப்புகளும், ஜோகூர் மக்களும் பங்கேற்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.