Home Featured வணிகம் எலி சிறுநீர்: கிள்ளானில் பிரபல ஐஸ்கிரீம் கடை உள்ளிட்ட 14 கடைகள் மூடப்பட்டன!

எலி சிறுநீர்: கிள்ளானில் பிரபல ஐஸ்கிரீம் கடை உள்ளிட்ட 14 கடைகள் மூடப்பட்டன!

724
0
SHARE
Ad

rat-atticகிள்ளான் – பண்டார் பாரு கிள்ளானில் அமைந்திருக்கும், உலகப் பிரபலமான  ஐஸ் கிரீம் (பனிக்கூழ்) விற்பனை கடை, இரண்டு புகழ்பெற்ற சிற்றுண்டிக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 14 கடைகள், சிலாங்கூர் சுகாதாரத்துறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

காரணம், அக்கடைகளில் சுகாதாரத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் எலி கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

போர்ட் கிள்ளானில் ஜாலான் பண்டாமாரனில் அமைந்திருக்கும் 8 சாலையோரக் கடைகளும் எலி கழிவுகளைக் கொண்டிருந்த காரணத்தால் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இது குறித்து ஸ்டார் மெட்ரோ வெளியிட்டுள்ள செய்தியில், உயர்தர அங்கீகாரம் கொண்ட அந்த ஐஸ் கிரீம் கடை மற்றும் கஃபே எனப்படும் இரண்டு புகழ்பெற்ற சிற்றுண்டிக் கடைகளும், ஏராளமான வாடிக்கையாளர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க கடைகளாக இருந்து வரும் நிலையில், சுகாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தற்போது அக்கடைகளை சுத்தப்படுத்தி, சுகாதாரத்தை மேம்படுத்த இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதுவரை அக்கடைகள் செயல்படாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலியின் சிறுநீர், கழிவுகளால், லெப்ட்ரோஸ்பிரோசிஸ் (Leptospirosis) என்ற கொடிய நோய் மனிதர்களைத் தாக்குகிறது. தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988-ன் கீழ், இந்த லெப்ட்ரோஸ்பிரோசிஸ் என்ற தொற்றுநோய் மரணத்தை விளைவிக்கக் கூடியது என வகைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படம்: கோப்புப் படம்