Home Featured உலகம் 288 வாக்குகள் பெற்ற டிரம்ப் அதிபராக அறிவிக்கப்பட்டார்

288 வாக்குகள் பெற்ற டிரம்ப் அதிபராக அறிவிக்கப்பட்டார்

793
0
SHARE
Ad

நியூயார்க் – அமெரிக்க அதிபர் தேர்தலில் 288 வாக்குகள் பெற்றுள்ள டிரம்ப் அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும்போது, டிரம்புக்கு 300-க்கும் கூடுதலான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

donald-trump-vice-president-familyடொனால்ட் டிரம்ப் குடும்பத்தினருடன் – அவரது துணை அதிபர் மைக்கல் பென்ஸ் குடும்பத்தினர் – வெற்றிக் கொண்டாட்டத்தின்போது…

தனது வெற்றியைக் கொண்டாடும் வகையில் நியூயார்க்கிலுள்ள தனது தேர்தல் அலுவலகத் தலைமையகத்தை, அதிகாலை 2.30 மணியளவில் வந்தடைந்த டிரம்ப் அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். அவரது உரையை முன்னணி தொலைக்காட்சி அலைவரிசைகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பின.

#TamilSchoolmychoice

ஹிலாரி கிளிண்டன் தன்னை அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக அறிவித்த டிரம்ப், கடும் போட்டியை வழங்கிய ஹிலாரிக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார்.

“அனைத்து அமெரிக்கர்களுக்கும் நியாயமான அதிபராக நடந்து கொள்வேன். அமெரிக்காவை ஒன்றிணைப்பேன். நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தி, பாலங்கள், சாலைகள் கட்டுவேன்” என்றும் தனது உரையில் டிரம்ப் முழங்கினார்.

எதிர்வரும் வியாழக்கிழமை டிரம்ப் அமெரிக்க நடைமுறைப்படி நடப்பு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் அதிகாரபூர்வமாகச் சந்திப்பார்.