Home Featured இந்தியா டிரம்ப் வெற்றியை இனிப்பு வழங்கிக் கொண்டாடிய இந்து அமைப்பு!

டிரம்ப் வெற்றியை இனிப்பு வழங்கிக் கொண்டாடிய இந்து அமைப்பு!

908
0
SHARE
Ad

trump

புதுடில்லி – அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றியை புதுடெல்லியில் உள்ள அவரது ஆதரவாளர்களான இந்து சேனா அமைப்பினர் ஆரவாரத்துடன் நேற்று புதன்கிழமை கொண்டாடினர்.

டிரம்பின் வெற்றி குறித்த தகவல் வெளியானது பாரம்பரிய இசைக் கருவிகளுடன் வீதிகளில் ஆரவாரத்துடன் இசைத்துச் சென்ற அவர்கள், அனைவருக்கும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக அந்த அமைப்பைச் சேர்ந்த விஷ்னு குப்தா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

குறிப்பாக முஸ்லிம்கள் மீதான டிரம்பின் கடும் சொல்லாடல் இந்தியாவில் சில தரப்பினரிடையே அவருக்கு ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது.

அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என்று தனது தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் வாக்குறுதி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.